search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோகன் சி லாசரஸ்"

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வைத்து 2 ஆயிரம் பேருக்கு மோகன்.சி.லாசரஸ் விருந்து வழங்கினார். #mohanclazarus
    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

    இதே போன்று இந்த ஆண்டு  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன். சி. லாசரஸ் தலைமை வகித்தார். நாலுமாவடி சேகர குரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தார். 

    நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள ஏழை -எளிய மக்கள் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டன.  ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.  #mohanclazarus
    சென்னையில் இந்தியாவின் நம்பிக்கை, வேதம் என்ற தலைப்பில் கூட்டத்தில் பேசிய சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து அதை வெளியிட்டுள்ளனர் என்று மோகன் சி.லாசரஸ் வாட்ஸ்-அப் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். #MohanCLazarus
    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான மோகன் சி.லாசரஸ் இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். இவர் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. அதில் இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியிருந்தார்.

    இது தொடர்பாக அவர் பலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது கோவை, பொள்ளாச்சி, நாசரேத், பாளை பெருமாள்புரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மோகன் சி.லாசரஸ் பேசிய வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-



    இந்து தெய்வங்களை பற்றியோ, மதத்தை பற்றியோ நான் இழிவுப்படுத்தி பேசவில்லை. சர்ச்சைக்குரிய அந்த காட்சி எப்பொழுது பேசியது என்று அதில் கூறப்படவில்லை. பொது இடங்களில் இதுபோன்று நான் பேசியதில்லை.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இந்தியாவின் நம்பிக்கை, வேதம் என்ற தலைப்பில் கூட்டத்தில் பேசிய காட்சி அது. அதில் சில வார்த்தைகளை மட்டும் வைத்து திரித்து அதை வெளியிட்டுள்ளனர். எனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மதத்தில் உள்ளனர். அவர்களிடம் கூட நான் தவறுதலாக பேசவில்லை. என்னிடம் ஏராளமான இந்து மதத்தினர் பிரார்த்தனைக்காக வருகின்றனர்.

    இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார். #MohanCLazarus

    ×